கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு குண்டல் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் செயல்பட்ட பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவாகினர். இதுகுறித்து ராஜேஸ்வரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நிர்வாக இயக்குனரான சங்கர் என்பவரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் கூறியுள்ளார்.