அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜவர்மன் என்ற மகன் இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜவர்மனும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜவர்மனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜவர்மன் தனக்கு ஏற்கனவே நிச்சயமாகிவிட்டதாக கூறி காதலியே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரியலூர் மாவட்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜவர்மனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.