நிசான் அறிமுகம் செய்யும் புதிய தொழில்நுட்பம்….. இனி உயரப்போகும் மின்சார வாகன விற்பனை….!!!!

நிசான் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் மின்சார வாகனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பெருநிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தினமும் புதிய புதிய தொழில்நுட்பத்துடன், புதிய அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளிவருகின்றது. அந்த வகையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டு மின் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி விட இரண்டு மடங்கு வேகமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குறைந்த விலையில் இந்த பேட்டரிகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனை நிலையில் உள்ள இந்த பேட்டரிகள் முழுதாக 15 நிமிடத்திற்கு சார்ஜ் செய்துவிடலாம் என்றும், தற்போது உள்ள பேட்டரிகளை விட எடை குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மக்களை மேலும் மின்சார வாகனங்களை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி தொழில்நுட்பம் 2028ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.