நா நெனச்சே பாக்கல… என்ன எடுப்பாங்கன்னு…. எனது கடைசி போட்டி சென்னையில் தான்…. தல தோனி நெகிழ்ச்சி!!

எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்..

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.. இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை வழங்கினார் மகேந்திர சிங் தோனி..

இதையடுத்து பேசிய எம்.எஸ் தோனி, எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அடுத்த ஆண்டாக இருந்தாலும், 5 ஆண்டுக்கு பிறகு இருந்தாலும் சென்னையில் தான் கடைசி ஐபிஎல் ஆடுவேன்.. வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் பல்வேறு மாநிலங்களில் கடந்து வந்துள்ளேன்.. எந்த நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர்.. சிஎஸ்கே அணிக்கான ரசிகர் பட்டாளம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவடைய வேண்டும் என்றார்..

மேலும் சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தனக்கு தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். 2008ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை தேர்வு செய்வார்கள் என நினைக்கவில்லை.. 2 ஆண்டுகள் சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, அதிகம் பேசப்பட்ட அணியாக சிஎஸ்கே இருந்தது என்று  பெருமிதமாக பேசினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *