பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று நேரடியாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். அதை வைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.