நாளை முதல்…. மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வு பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு‌ மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல்‌ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார். அதாவது முதல்நிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் படிப்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *