நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.