நாளை தேர்தல் பணியாளர்களுக்கு…. தபால் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்களுக்கு நாளை தபால் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பணியாளர்கள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்களிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.