நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…. பரபரப்பு புகார்..!!

நாளை நடைபெற உள்ள நிலையில் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் பூத் சிலிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்கள் விநியோகிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்களே பூத் சிலிப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி முறையாக நடக்கவில்லை. ஒரே வீட்டில் 4 வாக்குகள் இருந்தால் ஓர் இருவருக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.