தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனால் குடிமகன்கள் இன்று அதிகமான மது வகைகளை வாங்குவார்கள். எனவே ஒரு நபருக்கு பெட்டி பெட்டியாக மது விற்பனை செய்யக்கூடாது என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.