சேலத்தில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பெருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
சேலத்தில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் பூச்சாற்றுதளுடன் தொடங்கியது . இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி 100அடி உயரத்தில் பறந்தவாறும் நேர்த்திக்கடனை செலுத்தினர் .மேலும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர் .

நாளை ஆடி பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நடை பெற இருப்பதால் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பக்தர்கள் கத்தி அலகு , குதிரை அலகு ,வாய் அலகு ,தொடையில் குத்தும் அலகு மற்றும் முதுகு அலகு என 32 வருடமாக நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் அம்மனின் அருளால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர் .