நாளைய ( 06.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

நாளைய பஞ்சாங்கம்

06-04-2020, பங்குனி 24, திங்கட்கிழமை,

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்-

நாளைய ராசிப்பலன் –  06.04.2020

மேஷம் ராசிக்கு..

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சினைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படவேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம் ராசிக்கு.. 

இன்று  மனதில் குழப்பமும் கவலையும் ஏற்பட கூடும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாக கூடும். சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்த்து கொள்ளலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்கு..

இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம் ஏற்படும். மனமகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

கடகம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனநிம்மதி சற்று குறையும். உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள். அதனால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். நீண்ட நாட்களாக வராத பழைய பாக்கிகள் வந்து சேரும்.

சிம்மம் ராசிக்கு..

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

கன்னி ராசிக்கு..

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் போகும் இன்று. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

துலாம் ராசிக்கு..

இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீரான நிலையில் இருக்கும்.

விருச்சிகம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

தனுசு ராசிக்கு..

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முன்னேற்றமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம் ராசிக்கு..

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 05.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம்  மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

கும்பம் ராசிக்கு…

இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.32 மணிக்கு மேல் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யக்கூடிய வேலைகளில் தடைகள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது, வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

மீனம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *