நாளைய ( 04.03.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!

நாளைய பஞ்சாங்கம்

04.04.2020 பங்குனி 22, சனிக்கிழமை,

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00,

நாளைய  ராசிப்பலன் – 04.04.2020

மேஷம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை இல்லாமல் போகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.

ரிஷபம் ராசிக்கு..

இன்று  பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

மிதுனம் ராசிக்கு..

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்திகள் வந்து சேரும்.

கடகம் ராசிக்கு..

இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீரென்று பணம் கைக்கு கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

சிம்மம் ராசிக்கு..

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். பெண்களுக்கு அனுகூலமான பலனை பெறுவார்கள். மனதில் நிம்மதி பிறக்கும்.

கன்னி ராசிக்கு..

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம் ராசிக்கு..

இன்று  அதிகாலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடும்.

விருச்சிகம் ராசிக்கு..

இன்று ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு ராசிக்கு..

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருங்கள்.

மகரம் ராசிக்கு..

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.08 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள், ரொம்ப நல்லது.

கும்பம் ராசிக்கு..

இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்தடையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள், அனைவரிடமும்  பாராட்டுக்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *