“நாராயணசாமி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது”… குற்றம் சாட்டிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி..!!

தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தான் நாராயணசாமி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பரப்புரை செய்து வந்தார். அப்போது அனைத்து தொகுதியிலும் முக்கியமான சாலைகள் கிராம சாலைகள் தெருக்களில் ரோடுகள், குண்டும் குழியுமாக கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி தரவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் நிதி கொடுத்ததாக கூறியுள்ளனர்.

மேலும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை இருந்தால்தான் எல்லா திட்டங்களையும் புதுச்சேரியில் அமல்படுத்த முடியும். அது போல மோசமான ஆட்சி செய்து அதன் காரணமாகத்தான் நாராயணசாமியை இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கட்சியே கூறிவிட்டது. இந்த தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பது கட்சிக்கு தெரிந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.