“நாய்கள் மீது தாக்குதல்” முன்னாள் ராணுவ வீரரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆசிரியர் ஒருவர் காவலாளியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்ஐசி வளாக குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நாய்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், நாய்களை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம்  அடைந்த ஆசிரியர் ஒருவர் பிரம்பால் காவலாளியை மிரட்டியதோடு, அவரை தாக்கவும் செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முன்னாள் ராணுவ வீரர் என்று கூட பாராமல் ஒரு பெண் ஆசிரியை அவரை பிரம்பால் தாக்குவதா? என்றும் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *