நாயுடன் வாக்கிங் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரு வருடத்திற்கு பின் வழக்கில் முக்கிய திருப்பம்..!!

இங்கிலாந்தில் கடந்த வருடம் மீட்கப்பட்ட பிறந்த குழந்தையின் சடலம் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் ஓட்டுநர் ஒருவர் காட்டுப்பகுதியின் வழியே தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது புதிதாக பிறந்திருந்த ஒரு ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றியதோடு,  வீடு வீடாக சென்று குழந்தையின் தாயை தேடியுள்ளனர். இச்சம்பவம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்துள்ளது. அந்த சமயத்தில் 37 வயதுடைய silipa Karesi என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

எனினும் அதன்பின்பு காவல்துறையினர் அவரை விடுவித்தனர். அதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் silipa கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த முறை குழந்தையை கொலை செய்ததாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.