நாம என்ன முட்டாள்களா ? மக்கள் கேட்குறாங்க…! நாங்க போராடுறோம்… அண்ணாமலை ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இங்கு இருக்கிறார்கள்.  நாம் எடுத்து இருக்கக்கூடிய எல்லா போராட்டங்களிலும் சாமானிய மனிதர்களை பாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை எடுக்கிறோம், முல்லை பெரியாறு இருக்கட்டும், மக்கள் அதை கேட்கிறார்கள், பாரதிய ஜனதா கட்சி போராட்டமாக செய்கிறது.

கோவிலுக்குள் போக வேண்டும், எல்லா வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும். அப்படி தான் நம்முடைய போராட்டம் இருக்கிறது. இது நிச்சயமாக காலத்தின் கட்டாயம். பொய் சொல்லி என்ன வேணாலும் சொல்லி ஆட்சிக்கு வருவோம், அதற்கப்புறம் மக்களை மதிக்க மாட்டோம் என்பது என்று சொல்வது தமிழக மக்கள் இனி ஏற்றுக் கொள்ளக் கூடாது.

குறிப்பாக இந்த அரசை பொறுத்தவரை வானத்தை கொடுக்கிறோம், குதிரையை கொடுக்கிறோம் எல்லாம் சொல்கிறார்கள். நாம் கேட்பது குறைந்தபட்சம் அறிக்கையில் சொன்னது குறையுங்கள், அதை குறைத்தீர்கள் என்றால் மக்களுக்கு அரசியல்வாதிகள் மீதும், அரசியல்  மீதும் ஒரு நம்பிக்கை வரும், இல்லையென்றால் யார் வேணாலும் எதுவென்றாலும் சொல்லலாம், ஆட்சிக்கு வரலாம் வந்த பிறகு உப்பு சப்பு காரணங்கள் சொல்வோம், அதை மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நாம் முட்டாள்களாக ஜனநாயகத்தில்….

நம்முடைய முதல்-அமைச்சர் ஒரு குழு போடுகிறேன், கமிட்டி போடுகிறேன் சரிபார்க்கிறேன் என்று சொன்னார், சரிபார்ப்பதற்கு மாநில அரசுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு அவங்க செய்யட்டும், ஆனால் இதை வந்து ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பதை விட ஆறு மாத காலம் என்பது ஒரு அடிப்படை வேலை நடந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *