நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரோட்டில் சென்று பெரியார் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேளுங்கள் பார்ப்போம் என்று திமுகவுக்கு சவால் விட்டார். அதன்பிறகு பெரியார் பற்றி நான் அவதூறாக பேசினேன் என்பதற்காக சீமானுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்லித்தான் பாருங்களேன் என்றும் கூறினார். சீமான் ஏற்கனவே பெரியார் பற்றி அவதூறாக பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவர் மீது காவல் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சீமானை தற்போது கடுமையாக எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சீமானால் கட்சியே நடத்த முடியாது. சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரினை பயன்படுத்த அனுமதி கிடையாது. யாரைப் பற்றியும் அவதூறு பேசிவிடலாம். ஆனால் அது எந்த நோக்கத்திற்காக பேசப்படுகிறது என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள். மேலும் சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கிடையாது எனவும் நான் மட்டும் கேஸ் போட்டால் சீமானால் கட்சியே நடத்த முடியாது எனவும் ஆர்.எஸ் பாரதி கடுமையாக எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.