தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் நடைபெற்ற போது ஆளுநர் ரவி உரையாற்ற வந்தார். அப்போது அவர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிவடைந்ததும் திடீரென சபையை விட்டு வெளியேறிவிட்டார். தமிழக அரசு கடந்த முறை எழுதிக் கொடுத்த உரையை படிக்காமல் வேறு மாதிரி ஆளுநர் படித்தது சர்ச்சையாக மாறிய நிலையில் இந்த முறை உரையை படிக்காமலேயே அவர் சென்று விட்டார்.

இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரை‌ விமர்சித்து வரும் ‌ நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் விமர்சித்துள்ளார். இது பற்றி இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி கூறியதாவது,நாம் அரசியல் செய்கிறோமோ இல்லையோ ஆளுநர் ரவி நன்றாக அரசியல் செய்கிறார். சட்டசபையில் ஆளுநர் வாக்கிங் செய்கிறார். அவர் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை. ஆளுநருக்கு வரைந்து கட்டிக்கொண்டு வரும் இயக்கமாகத்தான் அதிமுக இருக்கிறது என்று கூறினார்.