நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலம்…. “4300 மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்திற்கு ஏலம்”….!!!!!

நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4300 பருத்தி மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

செவ்வாய்க்கிழமை தோறும் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுகின்ற நிலையில் நேற்று நடந்தது. இதற்காக நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், வேளாண்கவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்ரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் 4300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள்.

இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுக்க திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர். இந்த பருத்தி மூட்டைகள் ஒரு கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *