நான் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து மாலத்தீவுக்கு சென்றது தவறா….? நடிகை ராஷ்மிகா ஆவேசம் …!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் தேவர கொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் காதல் பற்றிய செய்திகளுக்கு தற்போது ராஷ்மிகா ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சமீப  காலமாகவே சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய அவதூறு செய்திகள் அதிகமாகிவிட்டது. சிறு வயது முதல் நான் ஹாஸ்டலில் தங்கி படித்த போது பள்ளியில் அதிகமாக யாருடனும் சேர மாட்டேன். இதனால் என்னை நிறைய பேர் திமிர் பிடித்தவள் என்று கூறினார்கள். நான் தனியாக நிறைய நாள் அறையில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் இந்த சிறிய பிரச்சனைக்கு  சோர்ந்து போய் விடக்கூடாது என அம்மா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதில் வருவதால் என்னை நான் தேற்றிக்கொண்டு தைரியமாக இருக்கிறேன்.

ஆனால் எல்லை தாண்டி பிரச்சனைகள் செல்லும் போது அமைதியாக இருக்க மாட்டேன். அதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்பேன். நீங்கள் விஜய் தேவர கொண்டவுடன் மாலத்தீவிற்கு சென்றீர்களா அவரை காதலிக்கிறீர்களா என்றெல்லாம் விமர்சனம் வருகிறது. விஜய் தேவர கொண்டா என்னுடைய நண்பர். அவருடன் நான் டூர் என்றால் என்ன தவறு இருக்கிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply