காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சின்ன ஆழிசூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரன்- ரேவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கூலித்தொழில் செய்து வரும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ரேவதி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட காளியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேவதியை உறவினர்கள் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த குழந்தை வயிற்றிலிருந்து வந்தவுடன் “நான் வந்து விட்டேன்” என்று கூறியுள்ளது.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் அழத்தான் செய்யும். ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடன் முதன்முதலாக நான் வந்து விட்டேன் என்று ஒரு வார்த்தையை சொன்னது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக மாறிய நிலையில் தற்போது அந்த செய்தி மிகவும் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தை எப்படி பேச முடியும் ஒரு வேளை யாராவது பிரசவ அறைக்கு அருகில் நின்றார்களா என்று பார்த்தபோது ஒருவரும் இல்லை. அதன் பிறகு குழந்தை பேசியது செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள் போன்றோருக்கும் கேட்டுள்ளது. இத்தனை பேருக்கு கேட்டுள்ளது என்றால் குழந்தை பேசியது உண்மை தானே என்று கூறப்படுகிறது. மேலும் பிறந்தவுடன் பேசியதாக சொல்லப்படும் அந்த குழந்தையை கிராம மக்கள் பலரும் அதிசயமாக வந்து பார்த்து செல்கிறார்கள்.