நான் சப்போர்ட் பண்ணல…! உடனே கைது பண்ணுங்க ஸ்டாலின்… !!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அடுத்த சப்ஜெக்ட்டிற்கு  அடுத்த வாரத்தில் தான் வரப் போகிறேன், முழுவதுமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஸ்மார்ட் சிட்டிக்கு ஆயிரம் கோடி செலவு செய்தேன் என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார், ஸ்மார்ட் சிட்டி என்று சொல்வதற்குகூட வரலை எடப்பாடி பழனிசாமிக்கு பாவம். எங்கே என்ன செலவு செய்தார் ? 954 கிலோமீட்டர் வடிநீர் அதாவது தண்ணீர் கீழே இறங்கி போறதுக்கு கால்வாய் கட்டி இருக்கிறேன் என்று சொல்கிறார், நீங்கள் எல்லாம் கேமரா எடுத்துக் கொள்ளுங்கள்….

954 கிலோமீட்டர் எங்கே என்று காமிக்க சொல்லுங்கள்? அதை தெரிந்து கொள்வோம் நாமும். அவர் பாட்டுக்கு தேர்தல் நேரத்தில் பொய்யா சொல்லிட்டார். அவருடைய  ஒரு அறிக்கை போதும்… இங்க பத்தாயிரம் கோடி ஏதும் செலவழிக்கப்படவில்லை.  90, 95 சதவிகிதம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது பணம் ஒதுக்கப்பட்டது. அது மொத்தமாக கணக்கெடுத்து பார்த்தால் இவர் கேட்டது வங்கி, மத்திய அரசு இப்படி என்னுடைய கணக்குப்படி ஏழிலிருந்து எட்டாயிரம் கோடி தனியாக ஒன்று, அப்புறம் ஆயிரம் கோடியில் ஒதுக்கினது ஒன்று இப்படி ஏகப்பட்ட பணம் அதில் ஈடுபட்டு இருக்கு.

சென்னை மக்கள் பெயரால் பல ஆயிரக்கணக்கான கோடி லூட்டட். இப்பதான இந்த வந்தது திமுக ஆட்சி, இந்த ஆட்சியை சப்போர்ட் பண்ணி பேசல. ஆறு மாதம் முடியுது இந்த ஆட்சி வந்து, 3 மாதம் கொரோனாவில் போச்சு நீங்க பார்த்தீர்கள், அப்போ ஒரு மாதம் அவங்க நிலையாக வேண்டும்ல்ல ஒரு மாசம் ரெண்டு மாசம்,  அவுங்க  கொள்ளை அடிச்சு போயிடுவோம் அவங்கள எப்படி கேட்க முடியும், என்ன நியாயம் கொள்ளை அடித்தது யார்?

இந்த நிலையில் இப்போது இருக்கின்ற ஒரு நிலையை நான் எடுத்துச் சொல்கிறேன், இன்னும் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வருத்தம் இருக்கிறது. அன்றைக்கும் சொன்னேன் இன்றைக்கும் சொல்றேன் இதுவரை அவர்கள் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்பதுதான் எனது கேள்வி ஒரு நியாயமான கேள்வியாகத்தான் முதல்வரை கேட்கிறேன். இதுவரை உலா வந்து கொண்டிருக்கின்றார்கள் ஊழலில் ஈடுபட்டவர்கள். அதற்கு இந்த அரசு அனுமதித்து கொண்டிருக்கிறது காரணம் புரியவில்லை, அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *