திமுக கட்சியின்மைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நாம் தமிழர் கட்சியை பயன்படுத்தும் அதிகாரம் சீமானுக்கு கிடையாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சீமானால் கட்சியை நடத்த முடியாது என்றும் கூறினார். இது தொடர்பாக சீமானிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி என்னுடைய தாத்தாவோடது. தமிழ் தந்தை உடையது. நாம் தமிழர் என்ற பெயர் வைப்பதற்கு யாரிடம் சென்று அனுமதி வாங்க வேண்டும்.

சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கொளத்தூர் மணிமீது மரியாதை இருக்கிறது. இதையெல்லாம் அறிவுடன் தான் பேசுகிறார்களா. எத்தனை நாள் தான் இப்படி கட்டுக்கதைகளை பேசுவார்கள். உங்களுக்கு பெரியார் முக்கியம் என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். நாம் தமிழர் கட்சியை சோ ராமசாமியையும் குரு மூர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்து வாங்கி வந்தேன் என்கிறார்கள். மேலும் அதற்கான ஆதாரங்களிடம் இருந்தால் காட்டுங்கள் என்று கூறினார்.