“நான் கட்சியிலிருந்து விலக மெயின் காரணம் அவர்தான்”…. சூர்யா சிவா பரபரப்பு குற்றசாட்டு….!!!!

அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி போல என்று பேட்டியளித்தனர். எனினும் சூர்யா சிவாவை கட்சி பொறுப்பிலிருந்து ஆறு மாதம் நீக்குவதாக பா.ஜ.க தலைவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து நான் கட்சியிலிருந்து விலகுவதாக சூர்யா சிவா தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தான், தான் கட்சியிலிருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என்று சூர்யா சிவா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது பாஜக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.