தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாரிசு பணத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், நான் இந்த படத்தில் ஒரு சூப்பர் ஸ்டாரோட அப்பாவாக நடித்திருக்கிறேன் என்றும் விஜயுடன் நடிக்கும் போது நான் அடுத்த தலைமுறையை நோக்கி பயணிக்கிறேன் என்றும் கூறினார். மேலும் நிறைய படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.