“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. அதை யாரும் நம்பாதீங்க?…. நடிகர் சுதாகர் திடீர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரெயில் திரைப்படத்தில் அறிமுகமாகி 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே சுதாகர் உடல்நிலை பற்றி தெலுங்கு இணையதளங்களில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் திரையுலகினர் பலரும் சுதாகர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது, “என் உடல்நிலை பற்றி தவறான வதந்திகள் பரவி இருக்கிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். நான் உயிருடன் தான் உள்ளேன். ஆகவே கவலைப்பட எதுவுமில்லை” என்று பேசியுள்ளார்.

Leave a Reply