‘நான் உங்களை பார்த்துக்கிறேன்’ 4 மாத குழந்தையுடன் வெளியேறிய பெண்ணிற்கு… இளம்பெண் செய்த செயல்..!!

புனேவில் 4 மாத குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகமது நகர் ராகட்டா பகுதியை சேர்ந்த மஞ்சு மொரே என்பவருக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. சம்பவ தினத்தன்று கணவரிடம் சண்டை போட்டு போலீசில் புகார் கொடுத்த மஞ்சு தனது குழந்தையுடன் சகோதரி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக சத்தாரா செல்லும் ரயிலில் ஏறி பயணம் செய்தார். அந்த ரயிலில் அருணா பவாரி என்ற பெண்ணிடம் அறிமுகம் கிடைத்தது. மேலும் மஞ்சு மோரா தனது கணவரிடம் சண்டையிட்டு வந்துள்ளதை அவரிடம் கூறியுள்ளார். இதற்கு அருணா அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் இறங்கும்படி தெரிவித்தார். இரண்டுபேரும் ஹடப்சரில் இறங்கியதும் உணவு வாங்கித் தருவதாக கூறி ஓட்டலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

அருணா குழந்தையை கையில் வாங்கியுள்ளார். திடீரென்று திரும்பி பார்த்தபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு மொரே சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையை கடத்தி சென்ற அருணா பவர் மஞ்சரி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். 4 மாத குழந்தையை மீட்டு மஞ்சுவிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *