நான் இந்தியன் தாத்தா… கமல்ஹாசன் சூசகமாக எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சிறுவர்களுக்கு நான் ஒரு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நாற்காலியை பிடித்துக் கொண்டு நகர மாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள்தான் வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தாய்மார்களுக்கு நான் குழந்தையாக தெரிகிறேன், சிறியவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்