“நான் அவர்களை வீடு புகுந்த அடிப்பேன்”…. கொந்தளித்த நடிகை கங்கனா ராணாவத்…. பகீர் காரணம் இதோ…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் எமர்ஜென்சி என்ற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகை கங்கனா தயாரிக்கும் நிலையில், படத்திற்காக தன்னுடைய மொத்த சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கங்கனா தன்னை சிலர் வேவு பார்ப்பதாகவும், தன்னுடைய தனிப்பட்ட வரவு, செலவு கணக்குகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் போன்றவைகள் கசிந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் குழந்தை பெற்ற நட்சத்திர தம்பதி தான் தன்னை வேவு பார்ப்பதாக கங்கனா கூறியுள்ளார். இருப்பினும் அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தன்னை வேவு பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வீடு புகுந்து அடிப்பேன் என்று தற்போது ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.