“நானே வருவேன் வசூல்” செல்வராகவனை வியப்பில் ஆழ்த்திய தயாரிப்பாளர்….. என்ன செய்தார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போடுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளிலிலேயே 10.1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும் நானே வருவேன் திரைப்படத்தின் முதல் நாள் வசூலால் மகிழ்ச்சி அடைந்த கலைப்புலி எஸ். தாணு இயக்குனர் செல்வராகவன் மற்றும் அவரது மனைவிக்கு மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.