நாட்டில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். அதன்படி குஜராத், மராட்டியம், கேரளா, கர்நாடகா, தமிழகம், டெல்லி, இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நாட்டின் தற்போது பரவி வருவது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது எனவும் கூறியுள்ளார்.