நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி மெட்ராஸ் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை ஒரே பாடமாக தற்போது கொண்டு வந்துள்ளது. நான்கு வருட பி எஸ் திட்டத்தின் கீழ் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.இந்த படிப்பு களுக்காக முன்னணி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

பல்வேறு கல்வி நிறுவனங்கள் புதிய பல பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை ஒரே பாடமாக ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.