நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் செய்தி தொலைக்காட்சியாக இருக்கும் தந்தி டிவி தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று 66% பேரும், மோடி பிரதமராக வரவேண்டும் என்றும் 33% பேரும் ஆதரவளித்துள்ளனர்.