நாடு முழுவதும் தேசிய வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை நாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற UFBU கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம், திங்கள், செவ்வாய்கிழமையன்று வருகிறது. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து, 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவாகியுள்ளளது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.