“நாடு முழுவதும்….. “நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்”….. காரணம் இதுதான்…..!!!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் பல வாகன ஓட்டிகள் பல நாட்களாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *