நாடு முழுவதும் நாளை முதல்… 71 முன்பதிவற்ற ரயில்கள் இயக்கம்… மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் நாளை முதல் 71 முன்பதிவற்ற ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்திய ரயில்வேயின் வடக்கு மண்டலத்தில் 71 முன்பதிவு அற்ற ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் யூடிஎஸ் ஆன் என்ற செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.