நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரதமரின் கரிப் கல்யன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு இலவசமாக 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்ட திட்டம் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், தற்போது மேலும் நான்கு மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *