மத்திய அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் வழங்குகிறார். பிரதமர் மோடி இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.