இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தை நிர்ணயம் செய்கின்றது. இந்நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியினை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள் திட்டத்தில் இனி 8% வட்டி, தேசிய சேமிப்பு பத்திரத்தில் 7% வட்டி, அஞ்சலங்களில் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்கள் வட்டி 1 புள்ளி, 1% வரை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.