நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… செம அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு LTC பண வவுச்சர் திட்டத்தில் வருமான வரியிலிருந்து விலக்கு அளித்து மோடி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி LTC பண வவுச்சர் திட்டம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நேரடி பொருளாதார நன்மை இருக்கும். அவர்களின் பணம் சேமிக்கப்படும். இதனை தவிர நிறுத்தப்பட்ட DAமீண்டும் நிலுவைத்தொகை உடன் மீட்டெடுக்க முடியும். இந்த அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய ஊழியர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் இருந்தது. அதன் பிறகு தனியார் மற்றும் பிற அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டன. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் LTC வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

இந்த நேரத்தில் ஊழியர் தனது சொந்த ஊருக்கு இரண்டு முறை செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயண கொடுப்பனவில் விமான பயணம் மற்றும் ரயில் பயண செலவை ஊழியர் பெறுகிறார். மேலும் பண வவுச்சர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி LTC-க்கு பதிலாக பணியாளர்களுக்கு ரொக்க கட்டணம் செலுத்தப்படும். பயனாளரின் தரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணம் செலுத்தப்படும்.

கட்டணம் செலுத்துவது முற்றிலும் வரிவிலக்கு. இந்தத் திட்டத்தை பெறும் ஊழியர்கள் மூன்று மடங்கு கட்டணத்தை செலவிட வேண்டியிருக்கும். 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு செலவிட வேண்டியிருக்கும். Gst பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வணிகரிடம் மட்டுமே சேவைகள் அல்லது பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மத்திய ஊழியர்களுக்கு சம்பளம் மேலும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *