இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல செயலை தொடர்ந்து தடை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்படாத செயல்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் இவற்றை தொடர்ந்து கண்காணித்து நாடு முழுவதும் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.