நாடு முழுவதும் அடுத்து வரும் 500 நாட்களில்….25,000 செல்போன் டவர்கள்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில்  500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார்.

இந்நிலையில் 500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதற்காக 26 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அதற்காக நாடு முழுவதும் அடுத்து வரும் 500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.