“நாடு முழுதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல்”…. தமிழ்நாட்டில் எத்தனை பேர் தெரியுமா…? மத்திய கல்வி அமைச்சகம் தகவல்…!!!

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இடைநிற்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்றதாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். அதன்படி 2022-23 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 12,53,019 மாணவர்கள் பள்ளியில் இருந்து இடை நின்றுள்ளனர்.

இதில் சிறுமிகளை விட சிறுவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதாவது கடந்த கல்வியாண்டில் 6,97,121 சிறுவர்கள் இடை நின்றுள்ளனர். இதேபோன்று 5,55,854 சிறுமிகள் இடை நின்றுள்ளனர். இந்நிலையில் ஆரம்பக் கல்வியில் இருந்து 9,30,531 குழந்தைகளும், இடைநிலையில் இருந்து 3,22,488 குழந்தைகளும் இடை நின்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மட்டும் 20,352 குழந்தைகள் இடை நின்றுள்ளதாக கூறப்படுகிறது.