நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… பொதுமக்கள் சாலை மறியல்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென பூத்தாம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வேடசந்தூர்-எரியோடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.