பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் திராவிட சித்தாந்தத்தை பேசுவதாக கூறினார். அவர் புதிதாக எதுவும் கூறவில்லை எனவும் திராவிட சித்தாந்தத்தை மட்டும் தான் பேசுகிறார் என்றும் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விஜய் திராவிட கொள்கைகளை பின்பற்றுவதாக கூறி விமர்சனம் செய்தார். மேலும் இதற்கு தற்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும், ஐயா காமராஜர் அவர்களையும், அம்மையார் அஞ்சலை அம்மாள் அவர்களையும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களையும் அண்ணன் உதயநிதி பிளேடு என்கிறார். அண்ணன் அண்ணாமலை கிச்சிடி பாலிடிக்ஸ் என்கிறார். இரண்டு பேருக்கு ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து இருப்பார்களோ என்று தெரிகின்றது. மாநாட்டில் தலைவர் தளபதி அவர்கள் சொன்னது போன்று முகமூடி அணிந்து கொண்டு மறைமுகமாக ரகசிய கூட்டணியில் இருப்பது உண்மையாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது. தமிழ்நாடு மண் என்பது சித்தாந்த மண் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களின் கொள்கை தலைவர்கள் இந்த மண்ணுக்கான சித்தாந்தத்தின்படி, கொள்கைகள் படி வாழ்ந்தவர்கள். எங்கள் தலைவர்கள் இந்த தமிழ் மண்ணுக்கான கருத்தியலை விதைத்தவர். மதசார்பற்ற சமூகநீதி அரசியலை உருவாக்குவதே எங்கள் கொள்கை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
மத பிளவுவாத அரசியலை வீழ்த்த வேண்டும். உங்கள் தலைவர்கள் தமிழ் மண்ணிற்கு துளியும் தொடர்பு இல்லாதவர்கள். ஹே ஹே ஹோ ஹோ என்று பேசக் கூடியவர் எதற்கு தமிழ் மண்ணிற்கு வேண்டும். எத்தனை வருடமானாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தலைகீழாக நடந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள். நீங்கள் லண்டனில் போய் படித்தாலும்,அமெரிக்காவில் போய் படித்தாலும், ஆப்பிரிக்காவில் போய் படித்தாலும் உங்கள் பிளவுவாத கருத்தியலை தமிழ்நாட்டு மக்கள் அனுமதி மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் சாம்பார் சாதமும் சாப்பிடுவார்கள், ரச சாதமும் சாப்பிடுவார்கள்,தயிர் சாதமும் சாப்பிடுவார்கள், சிக்கன் பிரியாணியும் சாப்பிடுவார்கள், மட்டன் பிரியாணியும் சாப்பிடுவார்கள், பீப் பிரியாணியும் சாப்பிடுவார்கள், அவர்களுக்கு பிடித்த எல்லா உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால் ஒருபோதும் நஞ்சை சாப்பிட மாட்டோம் என்ற நெஞ்சுரத்துடன் இருப்பார்கள். உங்கள் பிளவுவாத அரசியல் நஞ்சு போன்றது. களத்தில் சந்திப்போம் அண்ணா என்று பதிவிடப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும், ஐயா காமராஜர் அவர்களையும், அம்மையார் அஞ்சலை அம்மாள் அவர்களையும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களையும் அண்ணன் உதயநிதி பிளேடு என்கிறார்.
அண்ணன் அண்ணாமலை கிச்சிடி பாலிடிக்ஸ் என்கிறார்.இரண்டு பேருக்கு ஏதோ ஒரு இடத்தில் இருந்து… pic.twitter.com/5t0YREszd3
— Loyola Mani (@LoyolaMani) December 1, 2024