தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு வரவேற்பு கொடுத்த நிலையில் அவர் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவர் விஜயின் அரசியல் வருகையை ஆதரிப்பதாக கூறிய நிலையில் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். அதே சமயத்தில் நடிகர் விஜய் திராவிட சித்தாந்தங்களை மட்டும் தான் பேசுகிறார் எனவும் புதிதாக எந்த ஒரு விஷயங்களையும் கூறவில்லை எனவும் அக்டோபர் மாதத்தில் எத்தனை முறை அவர் வெளியே வந்துள்ளார் எனவும் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பவர் 365 நாட்களும் மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் கூறினார்.
அதன் பிறகு முதல் மாநாட்டில் விஜய் நிறைய பேசியுள்ளதாகவும் அதற்கு எங்கள் கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் எனவும் இனிவரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றி பேசுவேன் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.
அவர் பேசும்போது, இன்னைக்கு புதிதாக வந்தவங்க எத பத்தியும் பேசாம எதுலையும் மாத்தாமல் நடுவுல சுத்துறாங்க. இன்னைக்கு வரவங்கள பார்த்தா அது புது பாலிடிக்ஸ். இந்த வடிவேலு சொல்ற மாதிரி தென்னை மரத்துல ஒரு கால் பனைமரத்துல ஒரு கால். இந்த சித்தாந்தத்தில் கொஞ்சம் அந்த சித்தாந்தத்தில் கொஞ்சம். இந்த தலைவர் போட்டோவை இங்க போடு அந்த தலைவர் போட்டோவ அங்க போடு. மொத்தமா 10 தலைவர் போட்டோவை போட்டுட்டா நம்மளை யாரும் கேட்க மாட்டாங்க. அவங்களையே கூப்பிட்டு கேளுங்க.
அது எப்படிங்க ரச சாதத்தையும் சாம்பார் சாதத்தையும் கலந்து வச்சுட்டு அதுல தயிர் சாதத்தையும் கலந்து வச்சுட்டு சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படி சாப்பிடுவாங்க. ஒன்னு ரசம் சாதம்னு சொல்லலாம் அல்லது தயிர் சாதம்னு சொல்லலாம் இல்லனா சாம்பார் சாதம்னு சொல்லலாம். மேலும் அப்படி இல்லாமல் மூணையும் சேர்த்து வச்சு சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படி சாப்பிட முடியும் என்று கூறுகிறார். இதற்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வாழை இலை விருந்தை அனுப்பியுள்ளனர். மேலும் நாங்கள் வாழை இலை போட்டு விருந்தோடு சாப்பிடுவோம் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும், ஐயா காமராஜர் அவர்களையும், அம்மையார் அஞ்சலை அம்மாள் அவர்களையும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களையும் அண்ணன் உதயநிதி பிளேடு என்கிறார்.
அண்ணன் அண்ணாமலை கிச்சிடி பாலிடிக்ஸ் என்கிறார்.இரண்டு பேருக்கு ஏதோ ஒரு இடத்தில் இருந்து… pic.twitter.com/5t0YREszd3
— Loyola Mani (@LoyolaMani) December 1, 2024
நாங்க இப்படி தான் பா சாப்பிடுவோம் .இதை கேட்டு இருந்தா நாங்களே சொல்லி இருப்போம் இதுக்கா லண்டன் போனீங்க.😂 pic.twitter.com/Eun0GjaONt
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) December 1, 2024