நாங்க இன்னும் வீடே கட்டல…. திடீரென போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்….!!!!

மதுரை மாவட்டத்தில் கட்டாத வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் குறுஞ்செய்தி வந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம், காட்டுநாயக்கர் தெருவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 500 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றியுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒதுக்கீடு ஆணை பெற்றும் அதற்கான இடத்தை ஒப்படைக்காமல் இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீட்டை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் என்ற கடிதம் வந்துள்ளது. இந்தக் கடிதத்தை பார்த்த பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டை தூய்மையாகவும், வீட்டின் முன்பு மரக்கன்றுகளை நடவும், அரசின் விதிப்படி பராமரித்து வந்தால் மத்திய அரசின் சார்பில் பரிசு வழங்கப்படும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பற்றி பயனாளிகள் குடிசை மாற்று வாரிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான திட்டம் கைவிடப்பட்டதாக தனி வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். எனவே அதிர்ச்சி அடைந்த பயனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *