நடிகை அசின் இந்தி அளவில் பிரபலமானவர் என்பதை நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக தளபதி விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கஜினி, போக்கிரி, சிவகாசி ஆகிய படங்கள் இன்றும் பலருடைய மனதை கவர்ந்த திரைப்படங்களாக உள்ளது. இதனிடையே நடிகை அசின் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக நேற்று அதிர்ச்சியளிக்கும் விதமாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அசின் தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது “எனக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் மகிழ்ச்சியான வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு விவாகரத்து என கூறி வரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.