“நாங்கள் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது”…. பாரத் ஜோடாவில் இணைந்த பிரியங்கா…. காங்கிரஸ் அதிரடி ட்வீட்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள்.

இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போர்கான் பகுதியில் ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு இருந்தார். அப்போது பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவருடைய கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைகான் வத்ரா ஆகியோரும் இணைந்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டரில் பகிர்ந்து நாங்கள் இருவரும் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது என்று பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply